காலம் தாண்டியும்.. கண்கலங்க வைக்கும் நினைவுகள்.. மறக்க முடியாத நிகழ்வு.. தொலை தூர பயணம்... மீள முடியாத பாசத்தின் ஆழம்... வாழ்கை என்னும் நீண்ட புத்தகத்தின் கடைசி அத்தியாயம். கரம் பொன் ஊரில்... செல்வமணி என்னும் பொன்மகளை... கரம் பற்றிய தவப்புதல்வனே.. நம் மனதில் நிலையான இடம் பிடித்த எங்கள் ஷானா அண்ணாவே.. காலங்கள் மாறினாலும்.. பாதைகள் மாறினாலும்.. உங்கள் புன்னகையும்... நீங்கள் எங்களை சிரிக்க வைத்த நாள்களையும்... ஷான் அண்ணா என்று கூப்பிட்ட குரல் கொடுத்தாலே... நின்று பேசும் பண்பு கொண்டவர்... எங்கு கண்டாலும் துணைவியாருடனே கைகோர்த்து போவீர்கள்.. இன்று உங்களை நினைக்கும் போது... சோகங்களே வாழ்கையின் வேதமோ... காலம் செய்த கோலம் என்று... துன்பம் பொறுப்போமோ.. உறவுகள் விடைபெறுவதும்... வாழ்கை விடுகதையாவதும்.. இதற்கு விடை தெரியாமல் அழுவதும்.. விதியின் விளையாட்டோ.. தீர்க்க சுமங்கலியாக.. எங்கள் மணியக்கா விடைபெறும் போதும்.. அவருக்கு துணையாகவும்... அவர் தனித்து போயி் விடுவார் என்று... நீங்களும் அவருடன் கைகோர்த்து போய் விட்டீகளா அண்ணா... எங்கள் ஊரில் இப்படி இணைபிரியா தம்பதிகளா போனது... அதிசயம் , அற்புதம்... ஆனால் உண்மை உங்கள் இருவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
We are so sorry for your loss. Our deepest condolences to your family. May you be surrounded by support and love. May their soul rest in peace. ♥️