Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லூர்த்துமேரி அருளானந்தம், பற்றிமா றெஜினா அருளானந்தம், மேரி விக்டோரியா
இறப்பு - 08 MAY 2015
அமரர் லூர்த்துமேரி அருளானந்தம், பற்றிமா றெஜினா அருளானந்தம், மேரி விக்டோரியா 2015 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லூர்த்துமேரி அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அக்காவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அக்கா.

எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனையும் எம் அக்காவுக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப் படிகளில் அக்கா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்...


யாழ். பருத்தித்துறை சென்தோமஸ் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பற்றிமா றெஜினா அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாயே நீ எம்மைப் பிரிந்து
தசாப்த காலமானதுவோ!
அருள் விளக்கே நீ அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா

நீ எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உன் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீ சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா

அரும்பசி வந்தபோது அம்மா உன் நினைப்பு
ஆற்றா நோய்க்கும் நீயே தானேயம்மா மருந்து
ஆயிரம் உறவுகள் பூமியில் இருந்தும்- என்ன
அன்னையே உனக்கு ஒப்பாகுமோ ஓர் உறவு

உன்னைத் தொழுதேத்த எம் முன்னே நீ இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம் இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும் உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...


யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி விக்டோரியா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புள்ள அம்மம்மா! உங்களை
நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது..

காலங்கள் பல கடந்தாலும்
கண்மணிகள் நாம் கலங்கி நிற்கின்றோம்
வாராயோ ஒருமுறை
வரம் ஏதும் தாரோயோ அம்மம்மா...

உங்கள் வழி நடத்தல் இன்றி
உங்கள் குரல் கேட்காது ஓவ்வொரு
நொடிப் பொழுதும் நாங்கள் ஏங்குகிறோம்
அம்மம்மா உங்கள் அன்பும் பாசமும்
எங்களுக்கு வேண்டும் அம்மம்மா
எங்கள் உள்ளம் ஏங்குகின்றது
வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்...

நீங்கள் விண்ணில் கலந்த நாள்
முதல் எங்கள் விழிகள் உங்களையே
தேடுகின்றது உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute