
யாழ்.தாளையடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugg, தாளையடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஜோன்சன் அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஈர விழியோடு எழுத முடியவில்லை- நண்பா!
பார இதயத்தோடு எழுதுகின்றோம்
என் கண் மணிக்குள் என்றும் உருவாகி மனத்திரையில்
இன்றும் கருவாகி விழி தந்த உன் விம்பத்தை பார்த்து
அழியும் எம் கண்ணீருள் இன்று உன் முகம் பார்க்கின்றோம்
என் கருத்தின் செறிவாகி எழுத்தின் வடிவாகி எம் கரம் கிறுக்கும்
வரிகளிலும் இன்று உன் முகம் காண்கிறோம்- நண்பா
என் மன அரங்கில் உன் சிரிப்பு நாதம் என்றும் ஒலிக்கும்- நண்பா
மரணம்- உன்னை அழைத்தது
பிரிவு- எம்மை அழ வைத்தது
இழப்பு– உன்னை இல்லாது செய்தது
பெயர்வு- இன்று எங்கே போனது
இருள் கரைந்து ஆதவன் தன் விழித்திரை நீக்கிய
அந்தக் காலைப் பொழுதில் பரந்திருள் மறந்து
நீ விழித்திரை மூடினாயோ நண்பா?
இறையவனும் மறுத்திட்டானா உன் துயில் கலைக்க
உங்களை தன் வசம் இழுத்த அந்த இறைவனுக்கு
எங்களின் வேண்டுதல் காதில் விழவில்லையோ?
உங்கள் கண்ணீரைக் கண்டும் காலன் அவனுக்கு
இரக்கம் தான் வரவில்லையோ?
சொல்லத் துடித்ததை சொல்லாமல் போனீராமே
பொறுக்குதில்லை நெஞ்சு வெடிக்கிறது உன் நினைவலைகள்
பொங்கி வழிகிறது எம் கண்ணீர் ஆறாக
நீ சிரஞ்சீவியாய் என்றும் நீ எம்முடன் வாழ்வாய் - நண்பா!
மாலை நேர எம் சந்தோசங்கள்- உன்
மரணத்தோடு கலைந்து போனது– நண்பா!
நிலையில்லாத உலகில் எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உன் நினைவுகள் வாழும்- நண்பா!
இரத்தம் வற்றினாலும் கற்பனை வற்றாத இருதயத்தை
எம் இதயம் தேடித் தேடிப் பார்க்கிறதே
விழியோரங்களில் இரத்தத்தின் கன்னத்தில்
கண்ணீர் சொரிகிறதே!
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள் ஈர விழியோடு
உனது பிரிவால் தொலை தூரத்தில் இருந்து விழிகள் கலங்கி நிற்கும் நண்பர்கள்....
நண்பர்கள்: சீலன், சிவா, அன்ரனி ஐயா, வேல்மாறன், ஜெயா, நாதன், சிறி, பாலா, சுரேஸ், கோணேஸ், சாந்தன், ரூபன், அன்ரனி(சீலன்), சசி, குகன்.