மாமா! அக்கா பிள்ளைகள் மேல் அளவு கடந்த ... அன்பு கொண்ட மாமா! நாம் தேடும் முன்பே .. எம் தேவை அறிந்து உதவிய மாமா ! வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்ல... தன் பாசத்தினாலும் நேசத்தினாலும் ...... தன் உறவின் நிஜம் புரிய வைத்த மாமா! ஆசை ஆசையாய் நாம் அன்போடு அழைக்கும் «மாமா» எம் சிறுவயதில் இருந்தே... மாமா என்ற உறவின்...... அழுத்தம் உணர்த்தி நின்றிர்கள்... தன் பிள்ளைகள் போலவே எம்மையும்.... .பிள்ளை ...பிள்ளை என்று பாசத்தோடு .... அழைத்திர்கள் ... அந்த அன்பான உறவை ... நாம். .....எங்கே தேடுவோம் ? நீங்கள் !..... இருக்கும் வரை ....... எம் மனதில் நீங்கள் ! விதைத்த ஆழம் தெரியவில்லை ..... எம்மோடு இல்லை என்ற போதிலே .... எம் மனதில் .....உங்கள் உறவின் ஆழம் உணர்த்தி நிக்கின்றிர்கள் ..... மாமா! எம் வருகை அறிந்து ..... எம்மை தேடி அன்போடு வருவீர்களே... அந்த அன்பான மாமாவை எங்கே தேடுவேன் ? பிள்ளை என்று அழைக்கும் அந்த ... இனிய உறவை எங்கே தேடுவேன்? மாமா! வார்த்தைகள் இல்லை.... எம் வலிகள் சொல்ல..... எம்மில் காட்டிய அன்பிற்கும் ...... உறவின் ஆழம் .....அர்த்தம் ..... உணர்த்திய உங்கள் செயலுக்கும் கோடி வந்தனங்கள்...... இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்ற ஏக்கம் எம் மனதில்..... ஏக்கமாய் .... நீங்கள் இல்லை என்ற வலி ஆழமானது...... 2018 இல்.....உங்களிடம் இருந்து விடை பெறும் போது ..... ஒரு கணம் கூட நினைத்தது இல்லை..... அது தான் உங்களை காணும் இறுதி தடவை என்று..... உங்கள் மறைவினில் .... உண்மை அன்பு இழந்தோம்... ஆசை உறவு இழந்தோம் ... கடந்த காலம் .... புரட்டிப் பார்க்கிறேன் .... கனக்கும் மனதில் .... கலங்கா உங்கள் உருவம் .. நிஜமாய் நிலைக்கும்.... நாம் வாழும் வரை ....... உங்கள் ஆத்மா சாந்தி அடைய ....... ஆண்டவனை வேண்டுகின்றேன் .... பிள்ளை (மருமகள் ) வாசுகி (நோர்வே )
We missed you sinnaiyah. Our deepest condolences to your families and friends who missed you. Rest In Peace and look after us from heaven. We deeply missing you. Ravi.