
-
10 OCT 1942 - 23 JAN 2021 (78 age)
-
பிறந்த இடம் : பலாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பலாலி, Sri Lanka
யாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் பாசத்திற்குரிய சகோதரனும், தாய் மாமனுமாகிய காலஞ்சென்ற அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.
சிறுவயதில் இருந்தே எங்களின் உயர்விற்காக பல வழிகளிலும் உரிமையுடன் நின்று உதவிகள் புரிந்து அனைவரது வாழ்வினையும் பிரகாசிக்கச் செய்த காலஞ்சென்ற அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதுடன் 31ஆம் நாள் நினைவு நாளாகிய இன்று 22.02.2021 திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம், முல்லைத்தீவில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லம் ஆகிய பராமரிப்பு நிலையங்களிலுள்ள சிறுவர்களிற்கு உணவு உபசாரமும் வழங்கப்படுகின்றன.
உங்கள் பிரிவால் வாடும் சகோதரர்கள் திருமதி மங்கையக்கரசி நாகராஜா(நோர்வே), திரு.அருளம்பலம் உலகநாதன்(கனடா)
மருமக்கள் பாலா(பிரான்ஸ்), ரதி(நோர்வே), வனிதா(கனடா), வட்ஸ்சலா(கனடா), சூரி(நோர்வே), வாசுகி(நோர்வே), ஜனகன்(நோர்வே), சங்கர்(சுவிஸ்)