யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்பு அப்பாவே!
அன்பாலும் அயராத உழைப்பாலும்
அவனியில் நாம் வாழ வழி செய்தவரே
திரை கடல் ஓடி
திரவியம் தேடி எம் பசி தீர்த்தவரே
தன்னலம் கருதாது தன் உறவுகளுக்கும்
தனிப் பெரும் பாசம் காட்டியவரே
இன்று நீங்கள் இல்லை என்ற செய்தியால்
மனம் நொந்து போனோம் அப்பா!
நாங்கள் தொலைதூரம் இருந்தாலும்
எம் கடமைகளை செய்ய காலம் விடவில்லையே அப்பா!
எப் பிறப்பில் உங்கள் இனிய முகம் காண்போம் அப்பா!
நாங்கள் எல்லோரும் உங்கள் ஆத்ம சாந்தியடைய
எப்பொழதும் பிரார்த்திப்போம் அப்பா!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எங்கள் அப்பாவின் மறைவுச்செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில், இல்லத்திற்கு வருகை தந்தும், தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் எமக்கு உதவி செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.