ஜேர்மனி Euskirchen(Kall)ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventryஐ வதிவிடமாகவும் கொண்ட ஆர்மீகன் லிங்கேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எனக்குள் வளர்ந்த கருவே
உனக்குள் எனைச் சுமந்த உயிரே!
"உனைப் பிரிய மாட்டேன் அம்மா"
என்று சொன்ன என் மகனே!
பக்கத்தில் உனை இருத்தி
பார்த்திருந்த காலம் எல்லாம்
கனவுகளாய், வெறும்
கற்பனையாய்.........
நினைக்கின்ற போதே நினைவு
தடுமாறுதய்யா!
காலத்தின் சதியோ!
கடவுளின் பிழையோ!
பெற்ற உனை பிரிந்து விட்டு
பேதலித்து நிற்கின்றேன்!
உறவுகள் எல்லாம் உடனிருந்த
போதும் உன் இடத்தை நிரப்பி விட
ஒரு உறவும் இல்லையேடா!
தனிமையின் சுமையோடு
தவிக்கின்றேன் உன் அம்மா!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலிக்கான மதிய போசன நிகழ்வு 01-05-2025 வியாழக்கிழமை ந.ப 12.00 மணிமுதல் 5.00 மணிவரை 346 Foleshill Road, Coveutry, CV6 5AJ எனும் முகவரில் நடைபெறும். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Please accept our heartfelt sympathies for your profound loss