
யாழ். பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரியதாஸ் மரிய ரெஜினா அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மரியாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற றப்பியல் நேசம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
றப்பியல் அரியதாஸ்(புத்தா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவரட்ணம்(தேவகிளி), யசிந்தா(இலங்கை), டேவிட்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வதாஸ்(நியூஸ்லாந்து- Smart Deal Bazaar உரிமையாளர்), புஸ்பதாஸ்(இலங்கை), அருள்தாஸ்(சுவிஸ்), இதயதாஸ்(பிரித்தானியா), மேரி ஸ்டெல்லா, மேரி அனுஸ்டெல்லா(நியூஸ்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டயானா(நியூஸ்லாந்து), சங்கீதா(சுவிஸ்), கஸ்தூரி(பிரித்தானியா), கெஷ்சர்(நியூஸ்லாந்து), Dr Royshan(இலங்கை) ஆகியோர்களின் அன்புமிகு மாமியாரும்,
றிஷ்மிகா, கர்ஷா(நியூஸ்லாந்து), ஆசாப், அபியா(சுவிஸ்), இக் ஷானா, லயாஷ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2020 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.