Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1969
இறப்பு 03 FEB 2020
அமரர் அர்த்தநாதீஸ்வர குருக்கள் ஞானேஸ்வரசர்மா (ஞானம் ஐயர்)
வயது 50
அமரர் அர்த்தநாதீஸ்வர குருக்கள் ஞானேஸ்வரசர்மா 1969 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரியை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை ஒக்கியம் பேட்டையை வதிவிடமாகவும் கொண்ட அர்த்தநாதீஸ்வர குருக்கள் ஞானேஸ்வரசர்மா அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அர்த்தநாதீஸ்வர குருக்கள், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் பொன்னுத்துரை, பொன்னுத்துரை விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரியதீஸ்வர், பிரியவர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பெத்தியம்மா, சிவாம்பிகை, காலஞ்சென்ற உமாசங்கரேஸ்வரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசர்மா, காலஞ்சென்ற சிவாநந்த சர்மா, வினோதா சிவாந்தன், சுஜீவன், துசியந்தன், சிவாநந்தன், சாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாகிருஷ்ணசர்மா, சாம்பவி, கணதீசர் சர்மா, சங்கவி, லாதங்கி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிதாசாய், விக்னேஸ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் 08:30 மணிவரை  இல. 5/289, விவேகானந்தர் தெரு, ஒக்கியம்பேட்டை, சென்னை - 97 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்