

யாழ். கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Hounslow பிரித்தானியா வை வசிப்பிடமாகவும் கொண்ட அரசரத்தினம் சுவேந்திரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
இயற்கையின் அழைப்பிதழில் உங்கள்
பெயரும் இருந்ததை
நாம் அறிந்திருக்கவில்லை
இப்படியும் நடக்கும்
என்றும் நினைத்திருக்கவில்லை
குருதிச் சொந்தமொன்று இல்லையென்று
நம்ப மறுக்கின்றது எங்கள் நெஞ்சம்...
அன்பின் ஆணிவேரொன்று அறுந்து போனதை
பொய்யென்றே நினைவெழுந்து நிற்கின்றது
உங்களின் இழப்பிலேதான் இழப்பு என்றால்
என்னவென்று கற்றுக் கொண்டோம்....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம் நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும் நீங்கள்
வெளிச்சத் துகள்களிலும் வெளிப்படும்
கண்ணீர்த் திவலைகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள் இல்லையென்று
காலங்கள் கழிகின்றன..
ஆயினும் உங்கள் நினைவுகளோடு
தான்
எம் வாழ்க்கை சுழல்கின்றது...
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
அன்னாரின் பிரிவால் வாடும்,
தந்தை: காலஞ்சென்ற சின்னையா அரசரத்தினம்
தாய்: அரசரத்தினம் இரஞ்சிதமலர்
சகோதரர்கள்:
காலஞ்சென்ற அ.சுரேஷ்குமார், சுசிலா சிவநாதன், அ.ஜெயக்குமார், அ.சுதாகரன் ராணி, சரிதா மலைவாணன்
மருமக்கள்:
சுகிர்தா இளங்கோ, சி.சுஜந்தன், சி.சுஜீவா, சி.சினோஜன், ம.நிரோஜன், ம.அபிராமி, ம.கேதீஸ்வரன், சி.சஞ்சி
பெறாமக்கள்:
சு.பிரீத்தி, சு.அபிஷேக், சு.சனோஸ், சு.ஷேணுகா