யாழ். நவாலி பிரசாத் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரசநாயகம் வசந்தகுமார் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரசநாயகம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரநிருபசிங்கம், கனகசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயதேவி, காலஞ்சென்ற புஸ்பராணி, வசந்தராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
லவகுமார்(கனடா), திருமலர்(கொழும்பு), புவனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா(கனடா), சங்கர்(கொழும்பு), ஜெயந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனஞ்சயன், கிரன், சமரன், பாலரமணி, கவிசங்கரன், சஞ்ஜீவ், சங்கல்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.