Clicky

மலர்வு 06 JUL 1965
உதிர்வு 23 AUG 2023
அமரர் அப்புத்துரை செந்தில்விநாயகன்
வயது 58
அமரர் அப்புத்துரை செந்தில்விநாயகன் 1965 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்த எங்கள் மாமா. ஆலமரம் போல் எங்கள் உள்ளங்களில் விழது விட்டு நின்றாய் உங்கள் இதியத்தில் எங்களுக்கு கூடு கட்டி பாசத்தை வளர்த்தீர்கள் ஈன்று எடுத்த தாயின் அன்புபோல் தாய்மாமன் அன்பு என்று தனி ஒரு தாய்மாமனாக எங்களுக்கு பன்னீர் தெலளித்து வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்ந்து நின்றீர்கள் எங்கள் அன்பு மாமாவே உங்களுக்கு எங்கள் கண்ணீர் தெளித்து வழி அனுப்ப காலன் கொடுமை செய்து விட்டான் கலங்கி நிற்கின்றோம் எங்கள் இதயம் நொந்து நீங்கள் செல்லும் இடமல்லாம் சிறப்பு சேர்ப்பீர்கள் உங்களுடன் பழகுவோரிள் இதயத்தில் அன்பு செந்தில் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்வீர்கள் தாய் மண்ணுக்கும் தாய் மொழிக்கும் அயராது உழைத்தீர்கள். தாய் மொழியை சுவாசியுங்கள் பிற மொழியை நேசியுங்கள் என்று எங்களுக்கு அறிவு மொழி பகிர்வீர்கள் அன்பும், அறிவும், நல்ல பண்பும் உள்ள எங்கள் மாமாவை எங்களிடம் இருந்து ஏன் பிரித்தாய் காலனே? எங்களைப் மோல் நீயும் அவர் மேல் பாசம் வைத்து விட்டாயா? உன் பாசக் கயிற்றை ஏன் அவர் கழித்தில் போட்டாய்? நீ அவரை கவர்ந்து சென்றாலும் எங்கள் இதையத்தில் இருந்து என்றுமே எங்கள் அன்பு மாமாவை உன்னால் கவர முடியாது எங்கள் எல்லோரையும் தன் தோழில் சுமந்து பாசம் காட்டி வளர்த்த எங்கள் மாமாவை உன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்து விட்டாய் நாங்கள் மோசம் போய்விட்டோம் எங்கள் மாமா இல்லாத உலகம் எங்களுக்கு இருண்டு விட்டது. எங்கள் கண்ணீர் மலர்களால் அவர் பாதங்களை பூசிக்கின்றோம். அவர் மீண்டும் எங்கள் அம்மம்மாமடியிலும் அந்த செந்தில் வினாயகன் அடியிலும் சேர வணங்கி நிற்கின்றோம். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். சாந்தி, சாந்தி, சாந்தி உங்கள் பிரிவால் வாடும் அன்பு மருமக்கள்
Write Tribute

Tributes