1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை ஜோதிவர்மன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
அகல் விளக்காய் நீ திகழ
ஆசை எல்லாம் நிறைவேற்ற
இமை விழியாய் நீ இருக்க - அதன்
சொற்பமெல்லாம் பகிர்ந்திட
ஈச்சமரக் கிளை போல
உமது நிழல் நிலைத்து நிற்க
ஊமை கண்ட கனவு போலாகியதேன்?
எமக்கெல்லாம் இணையாக
ஏங்குகின்றோம் நாமுறவை
ஐம்புலனும் உங்கள் நினைவால்
ஒரு மலரின் செடியாக
ஓடத்தின் திசையாக
ஓராண்டு காலமோடி மறந்தாலும்
கதறுகின்றோம் கதறுகின்றோம்
உங்கள் வழிபார்த்து.
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையீல்
நீர் இருப்பீர் மனத்திரையில்..!
தகவல்:
குடும்பத்தினர்