1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அப்புத்துரை ஜெயரத்தினம்
BA, SLAS, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளர்- புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, கொழும்பு, முன்னாள் Senior Governance- Advisor, G.T.Z, ஸ்டான்லி கல்லூரி/விடுதி பழைய மாணவர் (1953-60)
வயது 78
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை ஜெயரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்