கண்ணீர் அஞ்சலி நெடுந்தீவு மண்ணின் கல்விச் சிகரம் ஒன்று சரிந்தது...... எமது உறவினரும். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் யாழ்ப்பாணம் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட (முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ) அப்புகுட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் 26ம் திகதி காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறோம். இறுதியாக அவருடனான உரையாடல் எனது தந்தையார் அமரர் சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் 30 ம், திகதி தை மாதம் 2021 இறந்த செய்தி கேட்டு என்னுடன் தொடர்பு கொண்டதோடு தந்தையின் வாழ்க்கை வரலாற்று நூலூக்காக தந்தை பற்றிய கட்டுரையையும் பெப்ரவரி மாத இறுதியில் எழுதி அனுப்பி இருந்தார். ஆறாத்துயரத்தில் மூழ்க்கிப் போயிருக்கும் தங்களை இழந்து தவிக்கும் மனைவி ஜெயஸ்ரீ அக்கா , பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! சிவநாயகமூர்த்தி மாஸ்டர் குடும்பம்