யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புக்குட்டி சத்தியசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
ஆண்டொன்று ஆனதுவோ
ஆறிடுமா
எம் துயரம்
ஆல மரம் தான் வளர்ந்து
அழகு நிழல் பரப்பி அன்பு
வழி
வாழ்ந்த எங்கள் சகோதரரே!
உற்ற உடன் பிறப்பே
அடிமேல்
அடியெனவே மடியில் இடி
வீழ்ந்தது போல்
பாதி வழி தான் நின்று
தொப்புள்
கொடி உறவே சென்றதேன்!
விண்ணிலே வீற்றிருந்து
விடி வெள்ளியாய் ஒளி வீசி
வழி காட்டிடவே வேண்டுகிறோம்...
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!