அமரர் அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ்
(பெரிய ராசன்)
வயது 65
அமரர் அந்தோனிப்பிள்ளை கிறிஸ்ரி லூயிஸ்
1955 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
1985ம் ஆண்டு பிரான்சில் பெரிய ராஜன் என அறிமுகமாகி துளிர்த்தது எனக்கும் உனக்குமான நட்பு.
இடையில் தொடர்புகளும், நெருக்கமும் மங்கியபோதும் எங்காவது காணும் தருணத்தில் கட்டி அணைத்து மங்கிய நட்பை பிரகாசப்படுத்துவாய்.
உனது உடல் நிலையையும் உனது குடும்பத்தின் நலன்களை யும் அறிந்துகொண்டே இருந்த எனக்கு கிடத்த செய்தி ..., மீண்டும் எப்போதும் எங்கும் உன்னை காணமுடியாதே எனும் துயரச்செய்தியே.
இந்த இக்கட்டான கொரோணா காலத்தில் உன்னை மீளா பயணம் அனுப்பிவைக்கும் வைபவத்தில் கூட கலந்து கொள்ள முடியுமா எனும் நினைப்பும் மனதை வாட்டுகிறது.
உனது இழப்பினால் வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அமைதியையும் வார்த்தைகளால் வழங்குவதென்பதும் ஒரு சம்பிரதாயமே.
உனது நினைவுகளை சுமந்துகொண்டே உனது மனைவி பிள்ளைகள் வாழ்வார்கள். அதுவே உனது ஆத்மாவை என்றும் வாழவைக்கும் நண்பா...
உன் மீளாப் பயணத்திற்கு சலூயிட் அடித்து வழி அனுப்பி வைக்கிறேன் நண்பா
Write Tribute