
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montmagny ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் செல்வரட்ணம் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபநாயகம் ரெஜினோல்ட் பிரான்சிஸ் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்வரட்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிலம்புச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தீப்தி, சுவேதா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரசரட்ணம்(பிரான்ஸிஸ்), காலஞ்சென்ற பிராஸ்சிஸ்கா, அஞ்சலா, ஜெயரட்ணம்(ராசன்), விஜயரட்ணம்(விஜி), குணரட்ணம்(அலெக்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜ்பிரியன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
மருத்துவமனையிலிருந்து தகனம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கான வாகனவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
Our heartfelt condolences