

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
வலிமையான ஞானத்துடனும் நேர்மையுடனும்
லவுசான் தமிழ்ப் பள்ளியினை வழிநடத்தியவர்
அமரர் அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா அவர்கள்.
சுவிஸ் லவுசான் மாநிலத்தில்
தமிழ் குழந்தைகளிற்கு தமிழ்மொழியினை
புகட்டுவதற்காக 30 வருடங்களிற்கு மேலாக
பெரும் பணியாற்றிய
தமிழ்க் கல்விச்சேவையின்
லவுசான் தமிழ்ப் பள்ளியின் பொறுப்பாளர்
அமரர் அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா
அவர்களின் பிரிவுச்செய்தி
ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்துகின்றது.
தமிழ் தேசியத்தினையும்,
தமிழ் மொழியினையும்
நன்கு நேசித்து தன்னை முழுமையாக
அர்ப்பணித்து பணிசெய்த அற்புதமான மனிதர்.
தமிழ்மொழி ஆசிரியர்களையும்,
பெற்றோர்களையும், மாணவர்களையும்
ஒருங்கிணைத்து சுவிஸ் நாட்டிலேயே
அதிகூடிய மாணவர்களிற்கு
தமிழ் மொழி
கற்பிக்கின்ற தமிழ்க் கல்விச்சேவையின்
லவுசான் தமிழ்ப் பள்ளியினை
உறுதியும் அனுபவமும் மிக்க
முகாமைத்துவத்தின் ஊடாக
மூன்று தசாப்தங்களிற்கு
மேலாக சிறந்த திட்டமிடல்களுடன்
சிறப்பாக வழிநடத்தியவர்.
அவரின் பணிவு மற்றும் தமிழ்மொழி
குறித்த ஆழமான புரிதல்
தமிழ்க் கல்விச்சேவையினை
மேன்மை நிலைக்கு உயர்த்தியது.
தமிழ்க் கல்விச்சேவையின் வளர்ச்சியில்
பெரும் துணையாக இருந்த
அமரர் அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா
அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
பல்வேறுபட்ட சமூக சேவைகளின்
ஊடாக சிறந்த சமூக ஆளுமையாகத்
திகழ்ந்து தமிழ்மொழிக் கல்விக்கும்,
தமிழ் சமூக மாற்றத்திற்கும்
முற்போக்கான பங்களிப்பினை நல்கிய
அமரர் அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா
அவர்களை தமிழ்க் கல்விச்சேவையுடன்
இணைந்து லவுசான் வாழ் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும்
பெற்றோர்களும் மாணவர்களும்
பெருமையுடன் நினைவுகூர்வார்கள்.
ஆற்றல் மிக்க ஒரு அற்புதமான
சமூக சேவையாளரை இழந்து
நிற்கும் இந்த துயரமான நேரத்தில்
அமரர் அந்தோணிப்பிள்ளை இரட்ணராஜா
அவர்களுடைய ஆத்மா அமைதியடைய
பிரார்த்திப்பதுடன்
அன்னாரின் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபத்தினையும்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Jul 2025 9:30 AM - 12:30 PM