யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும், கோணாவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை இன்பராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன் பிறந்த உறவாக மட்டுமல்ல,
என் உயிரில் கலந்த உறவாக இருந்தாயே அண்ணா...
சிரித்து மகிழ்ந்த தருணங்களும்,
நினைவுகளாக மட்டுமே இன்று மாறிவிட்டதே...
என் கஷ்டத்தில் துணையாகவும்,
என் மகிழ்ச்சியில் பங்காகவும் இருந்த நீ,
இன்று என் அருகில் இல்லையே என்ற உண்மை
என் இதயத்தை ஒவ்வொரு நொடியும் வலிக்கச் செய்கிறது...
காலங்கள் கடந்தாலும் உன் நினைவுகள் மறையாது,
கண்கள் மூடும் நேரமெல்லாம் உன் முகமே தோன்றும்,
மீண்டும் ஒருமுறை உன்னுடன் பேசிட,
ஒரு நிமிடம் கிடைக்காதா என மனம் ஏங்குகிறது...
இறைவன் உன்னை எங்களிடமிருந்து பிரித்தாலும்,
எங்கள் இதயத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது.
மீண்டும் பிறவி ஒன்று இருந்தால்,
மீண்டும் உனக்கே தம்பியாகவோ
அண்ணனாகவோ பிறக்க வேண்டும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!