

-
10 JUN 1925 - 09 NOV 2018 (93 age)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ்ப்பாணம் டேவிற் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிமுத்து திரேசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
”உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்
அவா்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்”
அன்பும் புகலிடமுமான இறைவா! உமது இரக்கத்தின் ஆழத்தை சுவைத்து அதில் அமைதி காண உம் திருப்பாதம் வந்துள்ள எம் தாயார் அமரா்.அந்தோனிமுத்து திரேசம்மாவை உம் திருக்கரத்தில் ஏற்று அவா் விரும்பும் நித்திய நிலைவாழ்வை அளித்து அவா் என்றும் உமது இராட்சியத்தில் இன்புற்றிருக்க அருள் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி நவில்கின்றோம்.
இறைவா உமது அளவுகடந்த அன்பிற்கு நன்றிகள் பல.
எமது பாசமிகு தாயாரின் மரணசெய்தி கேட்டு எமக்கு ஆறுதல் கூறிய யாழ் மறைமாவட்ட ஆயா், குருமுதல்வா் மற்றும் ஏனைய குருக்கள், துறவற குருக்கள், அருட்சகோதரா்கள், அருட்சகோதாரிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வா் ஏனைய குருக்கள் மேலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபா் (GA) , வைத்தியா்கள், சட்டத்தரணிகள், பாடசாலை அதிபா், ஆசிரியா்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்..
விஷேடமாக அம்மா நோயுற்றிருந்த வேளையில் அம்மாவை பராமரித்த திருச்சிலுவை அருட்சகோதரிகளுக்கும், வைத்தியா்கள், தாதியா் உதவியாளா் அனைவருக்கும் அதிக அக்கறையோடு உதவி புரிந்த சகோதரிக்கு, வெளிநாடுகளில் பணிபுரியும் அருட்தந்தையா்கள், உறவினா்கள், தொலைபேசி, முகப்புத்தகம், குறுந்தகவல் ஊடாகவும், வெளிநாட்டிலும், எமது நாட்டிலுமிருந்து ஆறுதல் தெரிவித்தோருக்கும் எமது நன்றிகள்..
என்றுமே மறக்க முடியாத நினைவாக நன்றி கூறி நிற்கும்
அருட்பணி: அ. லோறன்ஸ், அ. போல், அ. லடிஸ்லோஸ்.
அருட்சகோ: அ. அமல்பேர்கா தி. சி.