Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 MAR 1932
இறப்பு 01 SEP 2020
அமரர் அந்தோனிப்பிள்ளை திரேசம்மா
வயது 88
அமரர் அந்தோனிப்பிள்ளை திரேசம்மா 1932 - 2020 பாஷையூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டு, பிரான்சில் காலமான திருமதி அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மம்மி, உள்ளம் ஏற்க மறுக்கிறது உங்களின் பிரிவை. ஆனாலும்,
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து 31 நாட்கள் ஆகிவிட்டது.
எல்லாமே ஓர் கனவு போல் நடந்து முடிந்து விட்டது.
இன்னும் சில காலம் எங்களுடன் நீங்கள் வாழ்ந்திருக்கலாம்...
தவிக்கிறது எங்கள் இதயம்

உங்களின் செல்லப் பேரப்பிள்ளைகள் தங்களின் ஆருயிர்
அம்மம்மாவுக்காகவும், அப்பம்மாவுக்காகவும் ஏங்குகிறார்கள்
இது விண்ணகத் தந்தையின் அழைப்பு என்றே நாம் எம்மை தேற்றுகின்றோம்
விண்ணரசில் பப்பாவையும் தரிசித்து இறைவனின் சந்நிதியில் இருவரும்
நித்திய வாழ்வைப் பெற்று அமைதியில் நிலைத்திருங்கள்.

எமது தாயாரின் மறைவுச் செய்தி அறிந்து நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலமாவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், விஷேசமாக இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவரது இறுதி பயணத்தில் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரினதும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எங்கள் நன்றியையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.