யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பலாலி வடக்கை வசிப்பிடமாகவும், மானிப்பாய் சென். ஆன்ஸ் ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை பாக்கியநாதன் பிலோமினம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
பத்துமாதம் என்னை சுமந்து பார் போற்ற வளர்த்துவிட்ட
பாசமுள்ள அன்னையே நித்தம் நித்தம் உன் நினைவு
நிழலாக நிற்குதம்மா,
தூரதேசம் நான் செல்ல துணையாக நீயிருந்தாய்
பக்கத்தில் இருந்து பாசமழை பொழிந்தாய்
கனிவாக பேசிடுவாய் கதைகள் பல சொல்லிடுவாய்
பிள்ளைகளை வளர்த்தது போல் பேரப்பிள்ளைகளை வளர்த்தாயே
அன்பைப் பொழிந்தாயே அரவணைத்துக் கொண்டாயே
மருமகனைக் கண்டவுடன் பெரு மகிழ்வு கொண்டாயே
நம்பி உம்மை வந்தவரை தம்பி என மகிழ்ந்தீரே
எல்லாப் புகழ் தனையும் எங்களுக்கு தந்துவிட்டு
எங்கே நீ சென்றுவிட்டாய் எனதருமைத் தாயே!
பேரப்பிள்ளைகள் வந்துவிட்டால் வாரப்பாடாய் இருப்பாயே
அம்மம்மாவின் செல்லமாக அவர்களை உன்மடி தந்தாயே
வருத்தம் வந்து வதைத்தாலும் பேரப்பிள்ளைகள் மொழி கேட்டு
பெருமிதத்தோடு சிரிப்பாயே அன்னையின் பிரிவு அனைவருக்கும்
ஆறா துயரை தருகிறது கண்ணீர் விட்டு அழுதாலும்
கவலை தீர மறுக்கிறது அன்பு பாசம், கருணைதனை
பண்பாய் சொல்லி வளர்த்தீரே புன்னகையுடனே கதைப்பாயே
புண்ணியவதியும் நீதானே வதன முகத்துடனே
வந்தோரை வரவேற்பாய் இன்முகம் காட்டி
இனிய மொழி பேசிடுவாய் நீ வாழ்ந்த வீடு இப்போ
நிறைவற்று இருக்குதம்மா பாசப் பிணைப்புடனே
பாரை விட்டுப்போனாயே அன்று நான் கதைக்கும்போது
ஆறுதலை தந்தாயே பேரப்பிள்ளைகளின்
பெருமைகூறி வியந்தாயே பூட்டப்பிள்ளைகளை
பூரிப்புடன் பார்த்தாயே எங்கே அம்மா நீ சென்றாய்
என்னுயிர் நிறைந்த தாயே இவ்வுலகம் உள்ள வரை
உன் நினைவு மாறாது கண்ணீரில் நினைவுகளை
கவலையுடன் பகிர்கின்றேன்.
அன்னாரின் துயரச்செய்தி அறிந்து துயர் பகிர்ந்த உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர் அனைவருக்கும் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வாயிலாகவும் முகநூல் மூலமும் அனுதாபம் தெரிவித்தோருக்கும், அன்னாரின் ஆத்மசாந்தி கிரியையில் கலந்து கொண்டோருக்கும் மற்றும் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details