யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அனற் மேரி திரேசா அல்வின் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தோர், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மூலமாக எமக்கு ஆறுதலும் அனுதாபமும் கூறியவர்கள், கனடாவிலும் பல்வேறு நாடுகளிலும் அன்னாருக்காக இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுத்தோர், திருப்பலிகளையும் வழிபாடுகளையும் நடத்திய குருக்கள், மலர்வளையங்கள், மலர்மாலைகள் பூக்கொத்துக்கள் அனுப்பியோர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல வழிகளிலும் உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“இந்த உலகில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த காலம் இன்பமே
எந்த நாளும் உங்கள் அன்பை வாழ்த்தும் எங்கள் நெஞ்சமே!”