காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, லண்டன் Dagenham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Mrs. Anne Joseph - Associate Pastor - Emmanuel Christian Fellowship- Ilford & Former Student of Trinco Methodist Girls' High School(Meena) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம் சென்றதோ?
உங்களை பிரிந்து வாழ்கின்றோம் என்று
நினைக்கும் பொழுது நெஞ்சம் உடைகின்றது
என்றும் மறையாது உங்கள் அன்பான
புன்முறுவல் பூத்த அழகான முகமும்,
அரவணைப்பும், அன்பு வார்த்தைகளும்,
விட்டு சென்ற நினைவுகளும்,
இதயத்தில் இடம்பிடித்து
இன்றும் பசுமையாகவே இருக்கின்றன!
உங்கள் அன்பின் நினைவுகளோடு
தவிக்கும் அன்பான கணவரும்,
கலங்கிய இதயத்தோடு அம்மாவின்
அன்பினை தேடும் பிள்ளைகளும்,
தாய் போன்று நம்மை நேசித்த உள்ளம்
எங்கே என துயருரும் மருமக்களும்,
அள்ளி அணைக்கும் பாசம் எங்கே
என ஏங்கிடும் பேரக்குழந்தைகளும்,
மகளின் முகம் காணா உருகிடும் தந்தையும்,
கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்டு
நம்மை மகிழ்வித்த சிரித்த முகம் எங்கே என
ஆறாத் துயருடன் சகோதரர், சகோதரியும்,
அன்புடன் பேசி பழகி, கனிவோடு விசாரிக்கும்
எங்கள் உறவு எங்கே என கலங்கிடும்
உற்றார் உறவினரும்
அத்தனை உறவுகளும் அங்கலாய்க்கின்றோம்
நம் அன்பினைத் தேடுகின்றோம்
சொந்த குடும்பத்தில் மட்டும் அல்ல
நீங்கள் சொந்தமாய் நினைத்த திருச்சபையில்
கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றிய
இறைபணியும் மறவோமே!
சபையின் தூணாக கணவருக்கு பக்க பலமாக நின்று
தேவனின் நற்செய்தியை கெம்பீரமாய் பிரசங்கித்தும்,
கண்ணீரின் பாதையிலும் களிப்போடு துதித்தலும்,
மரண பள்ளத்தாக்கிலும் மறவாமல் நினைத்த தேவனை
மனதார நன்றி சொல்லி பாடிடும் துதி ஒலியும்
இன்றும் எங்கள் செவிகளில் ஒலிக்கின்றன!
நமக்கோர் சவாலாய், இறைவனோடு இன்னும் எம்மை
இணைத்திட தந்த அன்பின் ஆலோசனைகளும்,
நம் முகம் வாடினால் தங்கள் முகமும் வாடியே
நம்மை அன்புடன் விசாரித்து ஆறுதல் அளித்த வார்த்தைகளும்
சபையின் அன்பு தாயார்! என கலங்கி நிற்கும் சபை மக்களும்
நம் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வற்றிப் போகவில்லை
உங்கள் நினைவுகள் அற்றுப் போவதில்லை
இறைவன் இயேசுவின் மார்பில் சாய்ந்து
வியாதிகள் வலிகள் இன்றி ஆறுதல் அடைகின்றீர்!
நம் இரட்சகர் இயேசுவின் வருகையில்
உங்கள் அன்பு முகம் நாம் காண்போம்!
நித்தியத்தில் முகமுகமாய் தரிசிப்போம்!
அந்த மாறா நம்பிக்கையிலே
ஆறுதல் அடைகின்றோம்!!!
இம்மானுவேல் கிறிஸ்தவ ஐக்கியம்- Ilford
குடும்பத்தினர் சார்பில் Anushya Anton