

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணி சுப்பிரமணியம் அவர்கள் 29-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை(மருதனார்மடம் பல்லப்ப பைரவர் தேவஸ்தான பரிபாலகர்) பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆசை மனைவியும்,
குலரஞ்சிதம்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(இலங்கை), கலாரஞ்சிதம்(இலங்கை), ஜெயரஞ்சிதம்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, அமிர்தலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அரிச்சந்திரன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சத்தியாதேவி, மகேந்திரன், பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவசக்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
வாணி- செந்தூரன்(கனடா), ரமேஷ்- நிஷா(அவுஸ்திரேலியா), ஆதவன்- நிலானி(பிரித்தானியா), நளினி- மாறன்(ஜேர்மனி), அகிலன்- ஜேவோன்(அவுஸ்திரேலியா), துளசி- இராகுலராஜ், வதனி-துஷ்யந்தன்(கனடா), தட்சாயினி(பிரித்தானியா), அபிராமி(அவுஸ்திரேலியா), சாரங்கன்(பிரித்தானியா), சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதித்தியன், அகரன், காருண்யன், அக்ஷஜன், ஆதிஷ், ஆருஷன், பைரவி, ஆலியா, ஜே. விதுரன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.