பர்மாவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வைமன் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணி இரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே..!!
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடையபிரார்த்திக்கின்றோம்!
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டுச்சென்ற எங்கள் அன்புத் தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு நாம் துயருற்றிருந்த வேளையில் நேரில் வந்து ஆறுதல் கூறி ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் தொலைபேசி, முகநூல், சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறி கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த உள்நாட்டு வெளிநாட்டு அனைத்து அன்புள்ளங்களுக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரி அதிபர் ஆசிரியர்களினதும், கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியாவிலிருக்கும் பழைய மாணவர் சங்கத்தினரால் வழங்கப்பட்ட மலர்வளையங்களுக்கும் அஞ்சலிக்கும் வேறு இடங்களிலிருந்தும் மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் இன்று வரை சகல உதவிகளிலும் நின்று ஒத்தாசை புரிந்த அன்பான உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Anna. Mammi. We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.