அன்னபூரணி அன்னையிவள் என் தந்தைவழி அவர்தம் தம்பியிவர் கந்தையா கண்ட அருமை மனையாள்.. நாமழைக்கும் குஞ்சியம்மா இவர்.. துஞ்சாமல் துயரம் காட்டாமல் அவர்தம் பிஞ்சுகளை பெயர் சொல்ல வளர்த்து பெருமையுடன் மக்கள் பரந்து பல நாடாய் வாழ்ந்திட மார்தட்டி வாழ்ந்திட்ட இந்த அன்னை இன்று இயமன் அவன் இடைமறிக்க அயலவன் வயிரவர் அருள்கண்ட அன்னையிவள் இறையவன் தாழடைந்தாள் இதுதான் இயற்கையே.. என்செய்கோம் நமக்கும் இது வழி என்றோ ஒருநாள் என்றிருப்பதல்லால் வேறென்ன கண்டோம்.. வாழ்வியலில் முடிவிதுவே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..