

அமரர் தம்பையா பசுபதி
பிறப்பு: 03-01-1933 - இறப்பு: 11-03-1991
யாழ்.ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ். நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா பசுபதி அவர்களின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
ஆண்டு முப்பத்திநான்கு ஆகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதை விட்டு விலகாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அமரர் அன்னபூரணம் பசுபதி
பிறப்பு: 30-05-1940 - இறப்பு: 03-10-2015
யாழ். நீர்வேலி மத்தி அரசகேசரி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னபூரணம் பசுபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் ஆனாலும்
உங்கள்
நினைவுகள் என்றும்
அழியாத
பொக்கிஷம் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க
கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும்
கடவுள் அம்மா!
காலங்கள் கடந்து சென்றாலும்
இன்னும் உங்கள் நினைவு
மட்டும்
நீங்கவில்லை அம்மா!
உன் அன்பான பேச்சும் இரக்கம்
கொண்ட
உள்ளமும் கனிவான
எண்ணமும்
உன் போல
துணையும் யாருமில்லை
இன்றுவரை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.