
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணா இராசதுரை அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அன்னமுத்து கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசதுரை(முன்னாள் பிரதி குடிவரவு, குடியகல்வு அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேசன், சுதாகன், சுகுணன், சுமித்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாபறா நேசம்மா, இராசதுரை, பிலோமினா, இராசமுத்து, மேரிதிரேசா, தேவசகாயம், பீற்றர் இம்மானுவேல் மற்றும் மேரி மெற்றில்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஐலின், ரோஷினி, தாரணி, சுகன்யா ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், மெக்டலின், சூசைப்பிள்ளை, அருளப்பா, பெணடேற் யோகேஸ்வரி, பெனடிக்ற், சின்னதுரை, செல்வரட்ணம், அன்னம்மா, சுப்பிரமணியம் மற்றும் டறோசியா, அன்னலட்சுமி, சரஸ்வதி, குமாரவேலு, மகேஸ்வரி, குணமணி, நாகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டானியேல், பிரியங்கா, அமென்டா, ஓவியா, விவேகன், அற்புதா, அஞ்சலி, அமலி, கீதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2018 சனிக்கிழமை அன்று பண்டத்தரிப்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences.