யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சண்முகம் அவர்கள் 03-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத்திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சினி(லண்டன்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), சுலோஜனா(ஆசிரியை- யா/ யூனியன் கல்லூரி), யோகரஞ்சிதம்(முன்னாள் ஆசிரியை- கிளி/ இராமநாதபுரம் மகாவித்தியாலயம், கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலட்சுமி, இராசம்மா, மங்கையற்கரசி, காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயநாதன்(லண்டன்), தெய்வலட்சுமி(பிரான்ஸ்), சுரேந்திரநாதன், மதிகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கணபதிப்பிள்ளை, கற்பகம், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, மகேஸ்வரி மற்றும் சிவப்பிரகாசம், விஜயரட்ணம், காலஞ்சென்ற சபாரட்ணம், முத்துலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்துக்கிருஷ்ணன் மற்றும் இரவீந்திரன், காலஞ்சென்ற மனோகரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷாரங்கன், ஷயானி, ரிசாங்கன், றொசான், கெவின், சசாங்கன், விருஷ்ணி, மகிசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.