10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னம் கந்தசாமி
வயது 88
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம் கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்