10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சங்கானை நிச்சாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம் பாலு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாயே நீ எம்மைப் பிரிந்து
தசாப்த காலமானதுவோ!
அருள் விளக்கே நீ அணைந்தது
சில நாழிகை போலன்றோ!
சிந்தனையில் தோன்றுதம்மா
நீ எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உன் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீ சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
மனதோடு எமை சுமந்து பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின் துயர் நெஞ்சை விட்டு நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்