Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 JUN 1933
மறைவு 12 OCT 2023
அமரர் அன்னலெட்சுமி துரைராஜா 1933 - 2023 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி:30/09/2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி கிழக்கு வீதியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும்  கொண்டிருந்த அன்னலெட்சுமி துரைராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா! அம்மா! அம்மா!
எங்கு சென்றீரோ!!
ஓராண்டு ஆகியும் உம்மை
எண்ணி ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்..

மீண்டும் ஒருமுறை உம் முகம்
காண கருவறையில் தொடர்ந்த
நம் உறவை காலனவன்
கல்லறையில் புதைத்தாலும்
நீங்காத உம் நினைவுகளுடன்
தினந்தோறும் போராடுகிறோம்

பேச மொழி தந்தீர்
வாழ வழி தந்தீர்- ஆனால்
நீங்கள் போன வழிதனை
சொல்லாது சென்றது- தினமும்
உம்மை சுவரோவியமாய் பார்பதற்கோ??

வாரும் அம்மா எம்மை பாரும்
வற்றாத நதிபோல் நம்மில் கலந்துவிடும்
எம் வாழ்வின் வழிகாட்டியாய்
தினம் இருக்க வேண்டிகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்