Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1936
இறப்பு 05 FEB 2019
அமரர் அன்னலட்சுமி கணேசன் (வேவி அக்கா)
வயது 82
அமரர் அன்னலட்சுமி கணேசன் 1936 - 2019 இராசாவின் தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கணேசன் அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காஞ்சனமாலா, அருந்ததி, தமயந்தி, சகுந்தலா, சாவித்திரி, நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வன்மிகலிங்கம், கிருஷ்ணபிள்ளை, திருவள்ளுவர், காலஞ்சென்ற சிவானந்தர், சச்சிதானந்தமூர்த்தி, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற தனேஸ்வரி, நகுலேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயரட்ணம், பேரின்பநாயகி, காலஞ்சென்ற குணசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகா, காண்டீபன், காஞ்சநேகா, மதுராங்கி, அபிராமி, கனுஜா, திவ்யா, நிதர்சினி, கஜவதனன், விதுசன், அர்ச்சனா, சந்தோஷ், நிறோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிஷேக், நயன்திஷா, மிகன், மதுரவாணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்