Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JAN 1966
இறப்பு 14 FEB 2022
அமரர் அனா மரியா லாலாகரன் 1966 - 2022 கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 48 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Osterode am Harz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அனா மரியா லாலாகரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புள்ள  தங்கச்சி ! உங்களை
 நினைக்கும் போது
 வரும் கண்ணீரை நாங்கள்
 துடைத்தாளும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது..

காலங்கள் பல கடந்தாலும்
கண்மணிகள் நாம் கலங்கி
 நிற்கின்றோம் வாராயோ
ஒருமுறைவரம் ஏதும்
தாரோயோ 
தங்கச்சி..!

உங்கள் வழி நடத்தல் இன்றி
 உங்கள் குரல் கேட்காது ஓவ்வொரு
நொடிப் பொழுதும் நாங்கள்
ஏங்குகிறோம் 
தங்கச்சி உங்கள்
அன்பும் பாசமும் எங்களுக்கு
வேண்டும் 
தங்கச்சி எங்கள் உள்ளம்
 ஏங்குகின்றது வழிமேல்
விழி வைத்து காத்திருக்கின்றோம்
வந்து விடுங்கள் மீண்டும் எங்களிடம்..!

கண்ணுக்குள் மணிபோல்
 இமைபோல் காத்தோயே 
தங்கச்சி.
 உங்களை காலன்
எனும் பெயரில் வந்தகயவன்
 களவாடி சென்றதேனோ...

நீங்கள் விண்ணில் கலந்த
 நாள் முதல் எங்கள் விழிகள்
உங்களையே தேடுகின்றது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்