1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 2001
இறப்பு 03 AUG 2020
அமரர் அனித்திரா இரஞ்சன்
வயது 19
அமரர் அனித்திரா இரஞ்சன் 2001 - 2020 பிரான்ஸ், France France
Tribute 119 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனித்திரா இரஞ்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கடந்துவிட்டதுவோ!

ஈராறு மாதங்கள் உருண்டோடியும் - எம்
மனமாறாத் துயரத்தோடு - நீ
மீள வராயோ என்ற ஏக்கத்துடன்
விழியோரம் நீர்நிரப்பி
உன் நினைவுகளை மட்டும் சுமந்து
வாசல் பார்த்து நிற்கிறோம் எம் மகளே!

நீ எம் கண்முன்னே வாழ்ந்த காலம்

கனவாகியே போனாலும்
 எம் முன்னே உன் முகம் எந்நாளும்
தூண்டாவிளக்காய் ஒளிர்கிறதே!

நீ மண்விட்டு மறைந்து விண்ணோக்கி
சென்றாலும் - கண்விட்டு
மறையாமல் உன் நினைவுகளையே
சுமக்க வைத்திருக்கும் - இக்
கொடிய வரத்தை எமக்கேன் தான் தந்தோயோ?

ஓராண்டுகள் ஆனதம்மா - இன்னும்
நம்பமுடியவல்லை எம்மால்!
இற்றுவிடா இனிய வாழ்வை காட்டிவிட்டு
அந்த காலன் வந்தழைக்க அதில் - நீ
அற்றுப்போனதேனம்மா?
உன் தாய் தந்தை முகம் மறந்து,
நீ அரவணைத்து வளர்த்த- உன்
ஆசைத் தம்பியை தவிக்கவிட்டு,
 அன்போடு உறவாடும் உறவினரை பிரிந்து,
தோழோடு தோழ் நின்ற தோழர்களை துறந்து,
ஈசன் கழலடி காண எமையெல்லாம்
வாடவிட்டு சென்றனையோ! 

விதி செய்த சதியென்று மனம் சற்றே
நினைத்தாலும் - உன் நினைவென்றும் எம்மை
உன் நினைப்பிலேயே நிச்சயமாய் உறைந்திருக்கும்!
வானுலக வாழ்வில் ஓராண்டுகள் கடந்தாலும்
எம் நினைவுலக வாழ்வில் என்றும்
அழியாத ஓவியம் நீயே - அனித்திரா!
இன்னோர் பிறப்பொன்று உண்டேல்
 அதில் மீண்டும் உனை காண மனம் கனக்க காத்திருக்கிறோம்! 

உன் நீங்கா நினைவுகளுடன்,
அப்பா( இரஞ்சன்) அம்மா(விமலா) தம்பி(ஆகாஷ்) 

தகவல்: அருணா இராமச்சந்திரன்

Summary

Photos

Notices

நினைவஞ்சலி Tue, 04 Aug, 2020
நன்றி நவிலல் Wed, 02 Sep, 2020