யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவ சின்னையா சிவப்பிரகாசபிள்ளை(குண்டுமணி மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசக்தி(லண்டன்), சிவநாதன்(Toronto), சிவநேசன்(Montreal), சிவசங்கர்(லண்டன்), சிவகரன்(Melbourne), சிவகலை(கொழும்பு), சிவகங்கா(Melbourne) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேசன், மைதிலி, உஷா, சொர்ணராணி, சிவஅனுஜா, பிறேம்நாத், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவயோகன், சிவகுமரன், சிவகௌரி, சிவசங்கரி, லக்ஷன், சிவசுருதி, சிவப்பிரியை, சிவநங்கை, சிவகாமி, ஏடி, ஜோன், அனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பைரவி, சிவமயூரி, நேத்ரி, கஸ்தூரி, கார்த்திகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், மியா, லிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பி.ப 01:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியிலிருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. Please accept our heartfelt condolences. Our thoughts are with you and your family during this difficult time.