1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆனந்தம் சிவகுருநாதன்
(அருமை அண்ணா)
வயது 69
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்ததையா உங்கள்
அன்பு முகம் காணாது துடிக்கின்றோம்
காலங்கள் உருண்டோடி விட்டதையா
கண்ணிமைக்கும் பொழுதினிலே எல்லாமே
முடிந்து போனதையா
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது
எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்