யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். இந்துகல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமுதஜோதி சண்முகசுந்தரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், 12-07-2023 புதன்கிழமை மு.ப 11:00 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறும் அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து, தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
யாழ். இந்துக் கல்லூரி வீதி,
யாழ்ப்பாணம்.