யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகரத்தினம் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வித்தியா (ஆசிரியை, யா/நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயம்), பகீரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.
உதயகுமார், பிரியந்தி (ஆசிரியை, வைகறை முன்பள்ளி அக்கராயன்குளம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டன்சிகன், யதுமிகா ஆகியோரின் பேரனும்,
பசுபதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் புவனேஸ்வரி, புஸ்பராணி, கணபதிப்பிள்ளை, சிவஞானசுந்தரம் (ஓய்வுநிலை ஆசிரியர்), தனலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அப்பையா. கோவிந்தன் மற்றும் சரஸ்வதி, பரமேஸ்வரநாயகி (ஓய்வுநிலை ஆசிரியை), மகேஸ்வரி (ஓய்வுநிலை ஆசிரியை), மகேந்திராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நெடுந்தீவு மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுந்தீவு தெற்கு வெல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +9476 897 4878