யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் சந்தி, வீரக்கொடியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகு சண்முகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஒரு முறைதான் இப்பிறவி
போனால் வாரது என்று தெரிந்தும்
போகும் வழி எல்லாம் - பாவி
என் மனம் உங்களைத் தேடுகின்றதே!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை நீ
எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு எங்களை
பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
With love and remembrance, we share in your sorrow. There are no words for such a melancholic time, but I want to express your caring calm character. You treated everyone like your own child. You...