

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர்பிள்ளை இலெட்சுமிகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெல்லண்டைக்கிராமத்தின் தலைமகனே
தரணியில் காந்தன் என்ற பெயருடன்
தலைநிமிர்ந்து வாழ்ந்தவரே
நீங்கள் மறைந்து ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் மனதில் நீங்கள் மறைந்த சுமை
கனதியாக நிற்கின்றது
நடுக்கடலில் திசையறி கருவியற்ற
ஓடம்போல் உங்கள் அன்பு மனைவி
வழிதேடி விடையற்று வீட்டின் வாசற் கதவில்
நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்ற
ஏக்கக்கனவில் நித்தமும் உங்களை
நினைத்தே வாழ்கின்றார்
அன்பை சொரிந்து ஆராட்டி சீராட்டி
எம்மை ஆளாக்கிய அன்புத் தெய்வம்
எங்கள் ஐயாவின் அரவணைப்பு
நினைவுகளை மட்டும்
மனக்கண்ணில் இமைமீட்டி உங்கள் பிள்ளைகள்
கண்கள் பிதுங்கி கண்ணீரில் மிதக்கின்றனர்
மாமன் ஒருவர் உள்ளார் என்ற மனத்தைரியத்தில்
இருக்கையில் நீங்கள் பாதி வழியில் தம்மை
பரிதவிக்கவிட்டு வாய்மூடிச் சென்றதனால்
மருமக்கள் வாடி வதங்கி நிற்கின்றனர்
பேரப்பிள்ளைகளோ வாயாற உங்கள் புகழை
தாம் பெற்ற கலாநிதிப்பட்டங்களால்
வான் உயர உரைப்பதற்கு பேரன் ஒருவர்
இல்லையென்று பெருமூச்சுவிட்ட வண்ணமுள்ளனர்
காலம் போகலாம் காயங்கள் மாறலாம்
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எம்மைவிட்டுப் போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் நெஞ்சினில் சுமந்து நிற்போம்
நெஞ்சு இருக்கும் வரை உங்கள் நினைவு இருக்கும்
ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் குமரன் குடும்பம் டென்மார்க்