
யாழ். கோப்பாய் வடக்கு றாதம்பைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் யோகேஸ்வரன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவதேவி(ஓய்வு நிலை ஆசிரியை- புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சத்தியஞானதேவி மற்றும் குஷலகுமாரி(கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், நகுலேஸ்வரன் மற்றும் கலாநிதி(கிளிநொச்சி), பத்மநாதன்(ஜேர்மனி), உதயகுமார்(அளவெட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவநாதன், பத்மநாதன்(டென்மார்க்), ஈஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிந்துசிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்