
யாழ். புங்குடுதீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சிவசாமி அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரமிளா, நிருஷலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகான், சசிகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணபாலசிங்கம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்- பிரித்தானியா), சண்முகராசா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(ஜேர்மனி), நவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற புவீந்திரன், சியாமளாதேவி(கனடா), தனபாக்கியம்(பிரித்தானியா), விஜயராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிங்கா(ஜேர்மனி), விமலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நமசிவாயம், கிறிஸ்ரின்மாரி, காலஞ்சென்ற ராஜகுலேந்திரன், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
பிரணவ், நேத்திராதேவி, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-02-2020 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் தெகிவளை கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.