1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்றுறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீண்ட பெருவெளியில்
நிற்கதியாய் நிற்பதுபோல்
மீண்டும் ஒரு பிறப்பாய்
காண்பதற்கு ஏங்குகிறோம்
வாழ்ந்து மடிதல் வழக்கேதான் ஆயிடினும் நாம்
வணங்குகின்ற தெய்வம்
மறைந்ததன்றோ ஆதலினால்
ஆண்டொன்று ஆகியும்
ஆறவில்லை எம் துயரம் அம்மா
பொறுமையின் பொக்கிஷமே
எங்கள் பெருமைகளின் பிறப்பிடமே
வறுமை சென்று விட்டதம்மா ஆனாலும் நீங்களின்றி
வெறுமை குடிகொண்டதம்மா
மறுமையென ஒன்றிருந்தால் எமக்கு மறுபடியும்
தாயாகமாட்டீரோ.....
சுருவிலுறை நாகம்மாள் உமக்கு
துணையிருக்க வேண்டுகிறோம்....
தகவல்:
குடும்பத்தினர்