திதி: 25.01 2026
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் பாலசுந்தரம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாக
பண்பின் சிகரமாய்
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
ஆசைகளை புறக்கணித்து
ஊர்போற்ற வாழ்ந்த எங்கள் அப்பாவே.....
எம்மைவிட்டுபிரிந்து இன்றுடன்
20ஆண்டுகள் கடந்து விட்டனவா....
விடிகின்ற பொழுதுகளில் எல்லாம்
நீங்கள்
வருகின்ற கனவுகளில் கூடவும்
நீங்கள்
வெளிச்சத்துகள்களிலும், வெளிப்படும்
கண்ணீர்த்துளிகளிலும் நீங்கள்
எப்படிச் சொல்வது நீங்கள்
இல்லையென்று
காலங்கள் கழிகின்றன.....
ஆயினும் உங்கள் நினைவுகளோடு தான்
எம் வாழ்க்கை சுழல்கிறது
நிஜங்கள் மறையலாம் நிழல்களும் மறையலாம்
ஆனால் உதிரத்தோடு ஒன்றிய உணர்வு
எனும் உங்கள் நினைவலைகள்
என்றும் எம்முடனே .... தொடர்கதையாய்
உங்கள் நீங்கா நினைவுடன் என்றும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்