Clicky

30ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 FEB 1940
ஆண்டவன் அடியில் 25 JUN 1996
அமரர் அமராவதி கந்தசாமி
வயது 56
அமரர் அமராவதி கந்தசாமி 1940 - 1996 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமராவதி கந்தசாமி அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீங்காத நினைவுகள் தந்து
 நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 30 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
 பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
 என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

காலங்கள் தான் போனதம்மா
 உங்கள் பிரிந்த வேதனை
 இன்னமும் குறையவில்லையம்மா
உங்கள் உடல் தான் மறைந்ததம்மா

கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
 30 ஆண்டுகள் ஆனதம்மா
 உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices