

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் செளந்தரநாயகம் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியநாதன்(ஓய்வுபெற்ற யாழ். புகையிரத நிலைய அதிபர்), திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருமதி தங்கமணி இம்மானுவேல் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபசெளந்தரி(லண்டன்), காலஞ்சென்ற றகு(இத்தாலி), ரவி(இத்தாலி), ரணா(லண்டன்), அமலா(ஜேர்மனி, நிருத்திய நாட்டியாலய இயக்குனர், முன்னாள் வேம்படி மகளிர் கல்லூரி நடன ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோசப் சந்தியாபிள்ளை, மலர், எல்சா, தயாவதி, காலஞ்சென்ற அன்ரனி சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜய், வினோத், யூலியானா, லஷ்மி, ஆனந்த், கியாரா, ரிக்கி, யூலியன், ஆதவியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வெரோணிக்கா, தேவ், டியோன், கிளவுடியா, லயனன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 12-01-2023 வியாழக்கிழமை அன்று ஏழாலை கிழக்கு புனித. இசிதோர் தேவாலயத்தில் பி.ப 03.00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஏழாலை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details