முல்லைத்தீவு வலையன்மடத்தைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kortrijk ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அல்பிறட் மரியறீற்றம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரியே!
எங்களுடன் பிறந்தவளே
எங்கள் அருமைச் சகோதரியே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததம்மா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரியே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எங்களுக்கு சகோதரியாய் பிறந்திடவே
நாங்கள் ஏங்குகிறோம்!!
உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம்..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில்
வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் உடன்பிறப்பே...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மருதநாயகம்(இலங்கை), அமலராணி(லண்டன்),
டில்லிமலர்(லண்டன்), லூர்த்தம்மா(லண்டன்),
தர்மசீலி(கனடா), சாள்ஸ்புனிதவளன்(கனடா)
இன்றே நீ. என்னோடு வான் வீட்டில்இருப்பாய்இவ்வாக்கின்படிஇவரின்ஆன்மாவிண்ணூலகில்இளைப்பாறட்டும்😭🙏